Tuesday, 11 September 2018

செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த 4ஜி plans - Telecom News


இன்றைய நிலைமை 

    அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் இன்று ஒரே மாதிரியான Offer-களே கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மற்றும் ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு தனித்தனி ஆப்பர்  களையும் வைத்துள்ளனர். இந்தக் கட்டுரையில் நாம் 200 ரூபாய்க்கு கீழே உள்ள ஆஃபர்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்

ஐடியா நிறுவனம் 

    ஐடியா நிறுவனம் 199 ரூபாய்க்கு ஒரு ஆஃபரை வழங்குகிறது. இந்த ஆஃபரில் ஒரு நாளைக்கு 1.4GB டேட்டா தருகிறது. அதாவது ஒரு மாதத்திற்கு மொத்தம் 39.2 ஜிபி டேட்டா ஆகும். இந்த Rs..199 பிளானில் ரோமிங் அடங்கும். மேலும் இந்த பிளானில் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் அனுப்பி கொள்ளவும் முடியும்.

பாரதி ஏர்டெல் நிறுவனம் 

    பாரதி ஏர்டெல் நிறுவனம் 199 ரூபாய் ஒரு பிளான் வைத்துள்ளது. இதுவும் ஐடியாவைப் போல 28 நாட்களுக்கு 39.2 ஜிபி டேட்டா தடுக்கிறது. அதாவது ஒரு நாளைக்கு 1.4 ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் இதில் அன்லிமிட்டட் கால் உட்பட ரோமீங்கும் கிடைக்கும். மேலும் இந்த Rs.199 பிளானில் ஒரு நாளைக்கு 100 SMS அடங்கும்.

ரிலையன்ஸ் ஜியோ

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 200 ரூபாய்க்கு கீழ் இரண்டு பிளான்களை வைத்துள்ளது ஒன்று 149 plan மற்றொன்று 198 பிளான்.

149 ரூபாய் பிளான் 

    ஜியோ நிறுவனத்தில் 149 ரூபாய்க்கு ஒரு பிளான் உள்ளது. இந்தப் பிளானில் ஒரு நாளைக்கு 1.5 ஜிபி வீதம் 28 நாட்களுக்கு மொத்தம் 42 ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த பிளானில் அன்லிமிடெட் கால் உட்பட ரோமிங்கும் கிடைக்கும். இந்த பிளானில் ஒரு நாளைக்கு நூறு எஸ்எம்எஸ் நம்மால் அனுப்பி கொள்ள முடியும்.

198 பிளான்

    ஜியோ நிறுவனத்தில் இருநூறு ரூபாய்க்கு கீழ் கிடைக்கக்கூடிய மற்றொரு பிளான் 198 ஆகும். இந்த பிளானில் ஒரு நாளைக்கு 2 ஜிபி வீதம் 28 நாட்களுக்கு மொத்தம் 56 ஜிபி பயன்படுத்திக்கொள்ள முடியும். மேலும் 149 ருபாய் கிடைக்கக்கூடிய அனைத்தும் இதில் அடங்கும்..

வோடபோன் நிறுவனம் 

    வோடபோன் நிறுவனமும் ஐடியா மற்றும் ஏர்டெல் போல 198 ரூபாய் ஒரு பிளான் உள்ளது. ஐடியா மற்றும் ஏர்டெல் போல இதிலும் ஒரு நாளுக்கு 1.4 GB  வீதம் ஒரு மாதத்திற்கு 39.2 ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் இந்த பிளானில் அன்லிமிடெட் கால் உட்பட ரோமிங்கும் கிடைக்கும். ஒரு நாளைக்கு 100 SMS அனுப்பி கொள்ள முடியும்

மேலும் தகவல்களுக்கு 

    இதுபோல தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களுக்கும் நமது இணையதளத்தில் follow செய்யவும்.

4 comments: